பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
தஞ்சாவூர்: சந்திரயான் - 2 வெற்றி பெற வேண்டி, திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர், நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர். 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். சந்திரயான் - 2 வெற்றிகரமாக நிலவில் இறங்கி செயல்பட வேண்டி, தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் சந்திரன் கோவிலில், மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அலங்காரம் செய்து தீபாராதனையும் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.