அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆண்டு விழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2019 12:09
திருப்பூர்: திருப்பூர், 50 அடி ரோடு, லட்சுமிநகர் அருணாச்சலேஸ்வரர் கோவில், 15ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது.
விழாவையொட்டி காலை, ஸ்ரீ மகா கணபதி பூஜை, புண்யவாசனம், 108 வலம்புரி சங்கு பூஜை; கணபதி ஹோமம், ருத்ர ஹோமம்; அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு, 108 சங்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் சீனிவாச சிவாச்சார்யார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.