மேலுார்: மேலுாரில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா ஆக., 30 காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மாலை நடக்கிறது. செப்., 11 கணபதி ஹோமம் நடந்தது.
அதை தொடர்ந்து பெண்களுக்கான கோலப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இன்று (செப்.,12 ) கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், திருவிளக்கு பூஜை நடக்கின்றன. செப்., 13 பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. 14ல் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.