ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே அடந்தனார்கோட்டை பொற்கொடி பூர்ணாம்பிகை சமேத ஹரிஹர புத்திர அய்யனார் கோவில் கும்பாவிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர் வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.பரிகார தெய்வங்களான விநாயகர், தண்டாயுதபாணி, கருப்பண சுவாமி, சப்பாணி கருப்பர், காளியம்மன், சப்தகன்னிகள், சிவன், பெருமாள், பைரவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.