பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
கோபி: கோபி, பச்சமலை முருகன் கோவிலில், நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு தனியாக சன்னதி கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
கோபி அருகே பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கடந்த, 1981, 2006 என கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதனால், ஆகம விதிப்படி, 2020ல், மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, உபயதாரர் நிதி மூலம், கடந்த சில மாதங்களாக பல்வேறு திருப்பணி நடக்கிறது.
கோவிலின் சிவன் சன்னதி மண்டபத்தில், 16 லட்சம் ரூபாயில் அழகுபடுத்தும் பணி, கோபுர ங்கள் கட்டுமான பணி நடக்கிறது. அர்த்த மண்டப வளாகத்தில், தேக்கு மர கனக சபையில் அருள் பாலிக்கும் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தனியாக சன்னதி கட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதி அருகே இடம் தேர்வு செய்து உபயதாரர் நிதியாக, 32 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஏப்.,22ல், பூமி பூஜையுடன் கட்டமைப்பு பணி துவங்கியது.
மலைப்பாதையின், வடகிழக்கு பகுதியில் பாறைகளை உடைத்து, அஸ்திவாரம் கட்டப்பட்டது. பின், அதிலிருந்து கருங்கற்களை அடுக்கி தற்போது, 38 அடி உயரத்துக்கு கான்கிரீட் கட்ட மைப்பு பணி நடக்கிறது. இதற்காக, டி.என்.,பாளையத்தில் இருந்து கருங்கற்கள் கொண்டு வரப்படுகின்றன.
மலைக்கோவிலின் நிலமட்டம் வரை மொத்தம், 42 அடி உயரத்துக்கு அஸ்திவாரம் கட்ட மைப்பு முடிந்தபின், அதன்மீது பிரதான கோவில் கட்டமைப்பு பணி துவங்கவுள்ளது. 12 அடி நீளத்தில், 16 அடி அகலத்தில், 13 அடி உயரத்தில், சன்னதி கட்டுமான பணிகள் துவங்கவுள்ளது. இப்பணிகள் அனைத்தும், நடப்பாண்டு இறுதிக்குள் முடித்து, 2020ல், மூன்றாவது கும்பாபிஷே கம் நடத்த, அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.