பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
மயிலம்: திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நேற்று 11ம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்தது.
காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமி களுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.தொடர்ந்து, நேற்று 11ம் தேதி மாலை 5:00 மணிக்கு நந்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பின்னர், சந்திர மவுலீஸ்வர சுவாமிக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று, ஆலகிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் கோவில், மயிலம் சுந்தர விநாயகர் கோவிலிலும் ரெட்டணை, பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.