பதிவு செய்த நாள்
13
செப்
2019
11:09
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீபாவளி முதல், பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும், என, தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
திருப்பதியில், பெருமாள் தரிசனத்திற்கு பின், லட்டு வழங்கப்படுவது போன்று, உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இலவச லட்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில், 500 லட்டுகள் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.இது குறித்து, கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், தீபாவளி முதல், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, அதிகாலை நடை திறந்ததில் இருந்து, இரவு நடை சாத்தப்படும் வரை, பக்தர்கள் அனைவருக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும், என்றார்.