மஞ்சூர் : பாலகொலா கிராமத்தில் உள்ள விஷ்ணு துர்கை அம்மன் கோவில் ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஊட்டி அருகே பாலகொலா கிராமத்தில் உள்ள விஷ்ணு துர்கை அம்மன் கோவிலின் நடப்பாண்டு விழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து விஷ்ணு துர்கை அம்மன் அலங்கரிக்கப்பட்டு, ஊர் தலைவர், கிராம மக்கள் முன்னிலை சிறப்பு பூஜை நடந்தது. காலை 11 மணியிலிருந்து கிராம மக்கள் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து படுகரின மக்கள் பாரம்பரிய உடையணிந்து கோவில் வளாகத்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர். பகல் 2 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணி முதல் மஞ்சக்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்த் எழுதி வடிவமைத்த படுகர் சமுதாய நாடகமான "மந்ததா மாத்து என்னும் நாடகத்தை அப்பகுதி மக்கள் அரங்கேற்றினர். நேற்று தேர் பவனி நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.