பதிவு செய்த நாள்
14
செப்
2019
03:09
வடமதுரை: வடமதுரை தென்னம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோயில், புனரமைப்பு செய்யப்பட்ட காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், மந்தை முனியாண்டி, கருப்பணசுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.11ல் துவங்கி நேற்று காலை வரை நான்கு கால யாக பூஜைகளாக நடந்தன. நேற்று கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது.ஊர் பெரியதனகாரர்களான கிருபாசங்கர், சுப்புதுரைசாமி, வெங்கடேசன், பாலசுப்பிரமணியம், அய்யாத்துரை, அழகர்சாமி முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் பிரசன்ன வெங்கடஷே் அய்யர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி மற்றும் சுற்று வட்டார மக்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை தென்னம்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.