சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் இருந்துபுதுச்சேரிக்கு வந்துள்ள ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை, வரும் அக்டோபர் மாதம் முழுவதும் ஒவ்வொரு கோவில்களிலும்தங்கி ஐயப்ப ஜோதியை ஏற்றி வருகிறது.ராஜ்பவன், முத்தியால்பேட்டை கோவில்களில் ஜோதி ஏற்றப்பட்ட சூழ்நிலையில் நேற்றுமுன்தினம்சின்னமணிக்கூண்டு எல்லையம்மன் கோவிலில் ரத யாத்திரை எழுந்தருளியது.இதனையொட்டி ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது.ஐயப்ப சுவாமியை வழிப்பட்ட பெண்கள் காமாட்சியம்மன் விளக்கில் ஜோதியை ஏற்றி, வீட்டிற்குள் அணையாமல் எடுத்து சென்றனர்.நேற்று14ம்தேதி முதலியார்பேட்டை தொகுதியிலும்,இன்று 15ம் தேதி உருளையன்பேட்டை தொகுதியில்உள்ள கோவில்களுக்கு ரத யாத்திரை செல்கிறது.