பதிவு செய்த நாள்
15
செப்
2019
02:09
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில் கும்பாபி?ஷகம் நடந்தது. கரூர் அருகே, கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், மகாலட்சுமி, முருகன், ராஜகணபதி உள்ளிட்ட சுவாமிகள் சன்னதி உள்ளது. இந்நிலையில், கும்பாபி?ஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோவில் புதுப்பிக்கப்பட்டது. சுவர்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் பல்வேறு யாக வேள்வி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று காலை, 10:15 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபி?ஷகம் நடந்தது. லாலாப்பேட்டை, கருப்பத்தூர், திம்மாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.