முதுகுளத்துார்:முதுகுளத்தூர் விஸ்வகர்ம ஐக்கிய சங்கம் மற்றும் ஐந்தொழிலாளர்கள் இளைஞர்கள் சங்கம் சார்பில் செல்வி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. காலை 9:00மணிக்கு பெண்கள் சங்கத்தில் இருந்து பொங்கல் பெட்டியை பஸ்நிலையம் ,காந்திசிலை வழியாக செல்வி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக துாக்கி வந்தனர். பின் பொங்கலிட்டு வழிபட்டனர். அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிேஷகம்,தீபாராதனைகள் நடைபெற்றது.ஐக்கிய சங்கத்தலைவர் பாலகுருசாமி தலைமைவகித்தார்.பொற்கொல்லர் சங்கத்தலைவர் தியாகராஜன்,இளைஞர் சங்கத்தலைவர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளைசங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.