கமுதி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2019 02:09
கமுதி : கமுதி அருகே பவானி அம்மன், சக்திகணபதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந் தது. கமுதி அருகே நீராவிகரிசல்குளத்தில் புதிதாக அமைந்துள்ள பவானி அம்மன், சக்திகணபதி மற்றும் பரிவார கோயில்களில், கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு யாகசால பூஜை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நீராவி, நீராவிகரிசல்குளம் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்து. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவினர் பாலமுருகன், முத்துவேல் செய்திருந்தனர்.