பரமக்குடி: பரமக்குடி வட்டார பொற்கொல்லர் தொழிலாளர் சங்கம்சார்பில், சின்னக்கடைத்தெரு காமாட்சி அம்மன் கோயிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.
சங்க தலைவர்கோபால்தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார். செப்.,17ல்விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தை அரசுவிடுமுறையாக அறிவித்து, அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணைபுரிகைலாச நாதர் சிவனடியார் தொண்டர்கள் பாண்டியராஜன், சுரேஷ்குழுவினரால் திருவாசகம் பாடப்பட்டது. பிரபு குழுவினர் வயலின் இசை நிகழ்த்தினர். சங்க செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார். இதே போல் ராமநாதபுரம் மாவட்ட பாரதீய மஸ்துார் சங்கம்சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தை தேசியதொழிலாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைவலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.