திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் அருகே வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு யாகம், வழிபாடு நடந்தது.
இக்கோயிலில் தெற்கு நோக்கி மூலபால காலபைரவர் எழுந்தருளியுள்ளார். நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தங்க கவசத்தில் எழுந்தருளினார். மகா கணபதி பூஜை, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், புஷ்பயாகம் நடந்தது. யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து சென்று, பைரவருக்கு அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.