பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா அஷ்டமி யாகம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம்,ஹோமங்கள் துவங்கி தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மூலவர் பைரவருக்கு பால், தேன்,சந்தனம், மற்றும் மூலிகை திரவியங்கள் கலசநீர் ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.