பதிவு செய்த நாள்
23
செப்
2019
01:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், அய்தர்பேட்டை பகுதியில் உள்ள, ஆகாய கன்னியம்மன் கோவில் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.இந்த திருவிழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம், பொய்யாகுளம் தெரு, காந்தி சாலை, ரயில்வே சாலை, ரெட்டிப்பேட்டை, தும்பவணம் தெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.பின், மதியம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு, 6:00 மணிக்கு, தீமிதி விழாவும் நடைபெற்றது.இரவு, 9:00 மணிக்கு, அம்மன் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.