பதிவு செய்த நாள்
23
செப்
2019
02:09
அவிநாசி:’மனித குலம் அனைத்துக்கும் பொதுவானது, தியானம்’ என, தியானத்திருவிழாவில் தெரிவிக்கப்பட்டது.ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீராம் சந்திர மிஷன் இணைந்து, அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில், தியான திருவிழாவை நடத்துகின்றன.நேற்று 22ல், மாலை துவங்கிய விழாவில், முதன்மை விருந்தினராக, அவிநாசி டி.எஸ்.பி., பரமசாமி பங்கேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி பேசியதாவது;ஜாதி, மொழி, இனம், மதம் கடந்து, மனித குலம் அனைத்துக்கும் பொதுவானது, தியானம். மாணவ பருவத்தில், பல்வேறு தீய பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர்.
அத்தகைய நிலையில் இருந்து அவர்களை மீட்டெடுக்கவும், அவர்களின் மனதை ஒருநிலைப் படுத்தி, நல்வழியில் கொண்டு செல்லவும், தியானப் பயிற்சி பேருதவி புரியும்.தேர்வு சமயத் தில் மாணவர் மனதில் உள்ள பதட்டத்தை தணிக்க, தியானப்பயிற்சி உதவுகிறது.போட்டி, பொறமை போன்ற தீய குணங்களை அகற்றி, மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல் தியான த்துக்கு உண்டு.இவ்வாறு, அவர் பேசினார்.
செந்துார் மஹால் நிர்வாக இயக்குனர் மாரப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். ’பிரைட்டர் மைன்ட்ஸ்’ சார்பில், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சமச்சீராக வைக்கும் செய்முறை பயிற்சி, குழந்தைகள் மூலம் வழங்கப்பட்டது.’இன்றைய வாழ்க்கைக்கு, தியான த்தின் அவசியம்’ என்ற தலைப்பில், திருப்பூர் ஹார்ட்புல்னெஸ் பயிற்சியாளர் பிரபு, பேசினார். முடிவில், மூச்சுப்பயிற்சி, ஓய்வு நிலைப்பயிற்சி மற்றும் தியானநிலை குறித்து, பயிற்சியளிக் கப்பட்டது.