பதிவு செய்த நாள்
24
செப்
2019
02:09
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும், நவராத் திரி விழா நடைபெறும். இந்த ஆண்டு, நவராத்திரி விழா, வரும், 28ல் துவங்கி, அக்., 8ம் தேதி வரை நடக்கிறது.
துவக்க நாளன்று, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், அகண்டம் ஏற்றுதல் மற்றும் அமாவாசை வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார்.
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் முன்னிலையில் நடக்கிறது.
வரும், 29ல், ஆதிபராசக்தி அம்மனுக்கு வேப்பிலை காப்பு, 30ல், சிறுதானியக் காப்பு சாற்றப் படுகிறது. கடைசி நாளான, 8ல், உலர் பழங்கள் காப்பு, கவுரி அம்மன் ஆகியவை நடைபெறு கிறது.தினமும் காலை, 7:30 மணியிலிருந்து இரவு, 9:00 மணி வரை, லட்சார்ச்சனை விழா நடைபெறும். ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.