பதிவு செய்த நாள்
01
அக்
2019
12:10
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், சக்தி கொலுவை தரிசித்தனர்.சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, பக்தர்கள் பங்களிப்புடன், சக்தி கொலு எனும் பெயரில், பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நவராத்திரியின் இரண்டாம் நாளான, நேற்று காலை, 11:30 மணி முதல், 12:00 மணி வரையிலும், மாலை, 6:30 மணி முதல், 7:00 மணி வரையிலும், சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, வேத பாராயணம், ஸ்ரீருத்ரம், சமஹம், ஸ்ரீசுக்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மாலை, 7:00 மணி முதல், 7:30 மணி வரை, பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. அதேநேரம், மன வலிமை பெற சக்தி கொடு எனும் தலைப்பில், டாக்டர் பிரேமா குமார் சொற்பொழிவும் நடந்தது.