பதிவு செய்த நாள்
01
அக்
2019
03:10
விருத்தாசலம் : விருத்தாசலம், ஜங்ஷன் ரோட்டில் உள்ள சத்யசாய் சமிதியில் நவராத்திரி கொலு வழிபாடு, கடந்த 29ம் தேதி துவங்கியது.
இதில், பெருமாள், சாய்பாபா, கிருஷ்ணர், லட்சுமி, பராசக்தி, சரஸ்வதி, சிவன், முருகர், விநாய கர், ஆண்டாள், சமயபுரம் மாரியம்மன், ராகவேந்திரர், சித்தர்கள், திருமண காட்சி, தீர்த்தகுளம், வன விலங்குகள், பறவைகள் என ஏராளமான பொம்மைகள் கொலு வைத்து வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, மாவட்ட ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் மோகனபிரியா, அனுராதா, பவுனாம்பாள், மீனாட்சி உட்பட பலர் செய்திருந்தனர்.
நடுவீரப்பட்டுபண்ருட்டி பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று 30ல் நவராத்திரி விழா துவங்கியது. பண்ருட்டி அடுத்த திருவதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு மூலவர் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
உற்சவர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ,விசேஷ அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதே போல், வராகி அம்மன் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.