கவி காளமேகம் கி.பி. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வைணவரான இவர் திருவரங்கம் கோயிலில் பணிபுரிந்து வந்தார். திருவானைக்கா கோயிலில் நடனமாடும் ஒரு கணிகையின்பால் காதல் கொண்டார். அவளுடைய விருப்பத்துக்காக வைணவம் துறந்து சைவர் ஆனார். அகிலாண்டேஸ்வரியின் அருள் கிடைக்கப்பெற்று சிலேடைக் கவி இயற்றுவதில் ஒப்பாரும் மிக்காரும் இன்றிப் பெரும் புகழ்பெற்றார்.
ஒரு சமயம் அவர் திருக்கண்ணபுரத்துக்குச் சென்றிருந்த போது மழைபெய்தது. மழைக்காக ஒதுங்க நினைத்துக் கோயிலை அடைந்தார். சைவராக மாறிய காளமேகத்தின்மீது பெருமாளுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தது. ஆகவே பெருமாள், ÷காயில் கதவை மூடி தாழ் போட்டுவிட்டார். அதை அறிந்த கவிஞர் பெருமாளின் வருத்தத்தைத் தணிக்க.
கண்ணபுரிமாலே கடவுளினும் நீயதிகம் உன்னிலுமோ நான் அதிகம் ஒன்றுகேள் முன்னமே உன் பிறப்போ பத்தாம்; உயர் சிவனுக்கொன்றுமில்லை என் பிறப்போ எண்ணத் தொலையாதே
-எனப் பாடினார். பாடலைக் கேட்டதும் பெருமாள் மகிழ்ந்து கதவைத் திறந்தார். காளமேகப்பெருமாள் இப்பாடலால் மறுபிறவியின்றி வீடுபேறு அளிக்கும் பெருமாள் இத்தலத்தில் உறைகின்றார் எனக் குறிப்பால் உணர்த்துகின்றார்.