அன்னுார்:குன்னத்துாராம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடந்தது. கோவிலில், நவராத்திரி, முதல் நாளன்று, கொலு வைக்கப்பட்டது. தினமும், இரவு கொலு பூஜை, பஜனை நடந்தது.
எட்டாவது நாளான நேற்று முன்தினம் 8ம் தேதி இரவு, சிறுமியர் தேவியர் வேடம் அணிந்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் கொலு பூஜை நடந்தது.சக்தி மாரியம்மனுக்கும், கோவில் வளாகத்திலுள்ள பால முருகன், சிவபெருமான் மற்றும் செல்வ விநாயகருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. உள்ளூர் பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.