பதிவு செய்த நாள்
10
அக்
2019
02:10
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின், உபகோவிலான, பி.என்.புதுாரில் உள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா, கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.
மாலையில் பெருமாள், பூமிநீளா தேவி சமேதரராய் அன்னவாகனத்தில், எழுந்தருளி திருவீதி யுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாள்தோறும் காலையில் ஹோமங்களும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு, சுவாமி கருடவாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.18ம் தேதி காலை, 9:00 மணிக்கு, பூமிநீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கல்யாணமும், மாலை, 6:00 மணிக்கு, கரிவரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலாவும் நடக்கிறது.