பதிவு செய்த நாள்
10
அக்
2019
02:10
மேட்டுப்பாளையம்:விஜயதசமியை முன்னிட்டு, ஐயப்பன்கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில், நேற்று முன்தினம் 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு சரஸ் வதி பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைகளின் நாக்கில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி துவங்கியது. கேரளாவை சேர்ந்த பிஜு திருமேனி, தங்க ஊசியால் குழந்தைகளின் நாக்கில், சரஸ்வதியின் ஸ்துதி எழுதினார். பின்பு குழந்தையின் விரலை பிடித்து, அரிசியில் ஹரி கணப தியே நமக என எழுதினார்.இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம்மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 189 பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் எழுத்தறிவித்தல் பூஜையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர்தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். குழந்தை களுக்கு நாக்கில் தேன் தடவி, நெல், அரிசி உள்ளிட்ட தானியங்கள் மீது எழுத கற்றுக்கொடுக் கப்பட்டது.