பதிவு செய்த நாள்
18
அக்
2019
01:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நிறுத்தப்பட்ட ராஜகோபுர பணிகள், மீண்டும் விரைவில் துவக்கப்பட்டு, ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என, கோவில் இணை ஆணையர் தெரிவித்தார்.
திருத்தணி முருகன் கோவிலில், ஹிந்து அறநிலைய துறை அனுமதியுடன், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, 2009ல் துவங்கப்பட்டது.கோபுரம், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயர கோபுரம் பணிகள் என, திட்டமிட்டு துவங்கி, ஆறு மாதங்களுக்கு முன், முடிக்கப்பட்டது. ஆனால், ராஜகோபுரத்திற்கும், மாடவீதிக்கும் இணைப்பு படிகள் அமைக்காமல், பணி கிடப்பில் போடப்பட்டது.இது குறித்து, கோவில் இணை ஆணையர் பழனிகுமார் கூறுகையில், நிறுத்தப்பட்ட இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கி, வரும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடித்து, ராஜகோபுர கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.