சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென் கரையில் புதுவசூர் எனும் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ளது. தீர்த்தகிரி முருகன் கோயில். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குக் கிழக்கே 8 கி.மீ. தொலை விலும், ரத்தினகிரி முருகன் கோயிலுக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, இந்த தலம். சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா என்று முருகன், ஔவையிடம் சொல்லாடல் புரிந்த தலம் இது என்கிறார்கள். பழைமை வாய்ந்த இந்த கோயில் கடும் கோடையிலும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும் புனிதக் கிணறு ஒன்றும் உள்ளன. இவற்றின் தீர்த்தம், நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. மலைக்கோயில் பிராகாரத்துக்கு எதிரேயுள்ள கன்னிக் கோயிலில், கன்னிகைகள் மஞ்சள் அரைக்கப் பயன்படுத்திய கல்லை இன்றும் காணலாம். மேலும் மலைமீது திகழும் முரு கனின் திருப்பாதங்கள் பதிந்த இரு இடங்களையும் புனிதமாகப் போற்றுகிறார்கள் பக்தர்கள்!