அஷ்டமி திதி இரவில் வணங்கவேண்டிய கால வைரவர், இக்கோயிலின் விசேஷம். சனி பகவான் இங்கே கழுகு வாகனத்தில் காட்சி தருகிறார். பெரும்பாலான கோயில்களில் ஐம்பொன் விக்கிரகமாக அருளும் நடராஜரும் சிவகாமி அம்மையும் இங்கே கல்விக்கிரகமாகவே எழுந்தருளியுள்ளார்கள். கடம்பவன தலமாதலால், சதய நட்சத்திர அன்பர்கள் வழிபட வேண்டிய தலம் இது என்கின்றன ஞான நூல்கள். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு சூரியக் கதிர்கள் அமிர்தகடேசுவரர் மேனியைத் தழுவி வழிபடுவது அற்புதம்.