கிடப்பில் பழநி கோயில் கும்பாபிஷேக பணிகள்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2019 01:10
பழநி: பழநி முருகன்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்க திட்டமிட்டு, ஓர் ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனைஅடைந்துள்ளனர்.பழநி முருகன் மலைக்கோயிலில் 2006 ல் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆகமவிதிப்படி 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. கும்பாபிஷேகத்திற்காக பழமை மாறாமல் தேய்மானம், சேதமடைந்துள்ள கற்சிலைகள், துாண்கள், சுதைகளை புதுப்பிக்க வேண்டும்.இதற்காக கடந்த நவம்பரில் அறநிலையத்துறை திருப்பணிகுழு ஸ்தபதிகள், பொறியியல், தொல்லியியல்துறை, வல்லுனர்குழு ராஜகோபுரம், மலைக்கோயில் அனைத்து பிரகாரங்களிலும் கற்சிலைகள், மண்டபத்துாண், சுதைகளை ஆய்வுசெய்தனர். பின் இந்தாண்டு செப்டம்பரில் பாலாலய பூஜையுடன் திருப்பணிகள் துவங்க திட்டமிட்டனர்.இந் நிலையில் இணைஆணையர் மாற்றத்தால் கும்பாபிஷேக பணிகள் ஓர் ஆண்டாக துவங்காமல் கிடப்பில் உள்ளது. பழநிகோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை துவங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இணைஆணையர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கூறுகையில், சென்னை ஆணையரின் அனுமதிபெற்று மலைக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றார்.