பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், சூரசம்ஹார விழா வரும், 2ம் தேதி நடக்கிறது.சூலுார் அடுத்த கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது.
இங்கு, கந்த சஷ்டி விழா இன்று 28ம் தேதி காலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு, காப்பு கட்டுதல், சத்ரு சம்ஹார ஹோமம் துவங்குகிறது. தினமும், காலை, 11:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.
வரும், 2ம் தேதி காலை, 11:00 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை முடிந்து, மாலை, 4:30 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம் நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நவ., 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.