பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா, இன்று துவங்குகிறது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா இன்று 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது.
தொடர்ந்து, நவ.,2ம் தேதி வரை தினமும் நான்கு கால அபிஷேக பூஜைகள் நடக்கிறது.நவ., 1ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும்; 2ம் தேதி காலை, 5:30 மணிக்கு சூரசம் ஹார சிறப்பு அபிஷேகம், மாலை, 3:00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், மாலை, 6:00 மிக்கு திருக்கல்யாண உற்சவமும்; 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.