பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.ஆனைமலை சக்தி ஜோதிட நிலையம் சார்பில், குருப்பெயர்ச்சி விழா, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி., காலனி விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவிலில், நாளை நடக்கிறது.
விழாவையொட்டி நாளை 29ம் தேதி காலை, 5:00 மணி முதல் புண்யாவாஜனம், விக்னேஸ்வர பூஜை, கலச ஆவாஹனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுயம்பர கலா பார் வதி ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், மகா ம்ருத்யுஞ்ஜெய ஹோமம் உள்ளி ட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி இன்று 28ம் தேதி மாலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை குருபகவானுக்கு கலச பூஜை, அர்ச்சனை, தீபாராதனை, ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து நாளை அதிகாலை, 3:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கு தல் நிகழ்ச்சி நடக்கிறது.பொள்ளாச்சி ஜோதிலிங்கேஸ்வரர் அறக்கட்டளை சார்பில், மகா குருப்பெயர்ச்சி விழா, ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை நடக்கிறது. விழாவையொட்டி காலை, 7:30 மணிக்கு குருப்பெயர்ச்சி ஹோம அபிஷேக பூஜைகள் நடக்கிறது.