பதிவு செய்த நாள்
28
அக்
2019
03:10
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், ஒரு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் நேற்று 28ம் தேதி தரிசனம் செய்தனர். தீபாவளி மற்றும் ஐப்பசி அமாவாசை தினமான நேற்று 28ம் தேதி, சென்னிமலை முருகன் கோவிலுக்கு, அதிகாலை, 4:30 மணி முதலே, பக்தர்கள் வரத் தொடங்கினர். கோபூஜையை தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனையை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
காலை முதல் மாலை வரை, பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள், கும்பல் கும்பலாக வாகனங் களில் வந்தபடியே இருந்தனர். பொது தரிசனத்தில், ஒரு மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது. வாகன நெரிசல் ஏற்பட்டதால், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், கார்களில் வந்த பக்தர்கள் பலர், அடிவாரத்தில் நிறுத்திவிட்டு, மலைகோவில் பஸ்சில் சென்றனர்.