பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
11:04
திண்டுக்கல் : வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில், திண்டுக்கல் நாகல்நகரில் எழுந்தருளினார். ஏப்., 5 ல், வடமதுரையில் இருந்து திண்டுக்கல் புறப்பட்டார். ஏப்., 6 ல், முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கி எதிர்சேவை நடந்தது. ஏப்.,7 முதல் 11 வரை, என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், திருமலைசாமிபுரம், நாகல்நகர், பாரதிபுரம், சவுராஷ்டிராபுரம் ஆகிய இடங்களில் எழுந்தருளினார். நேற்று, நாகல்நகர் பலிஜவாரு பொது மகாஜன மண்டபகப்படியில் ஷேச, ராமர், கிருஷ்ணர், மோகினி அவதாரங்களில் காட்சியளித்தார். பின், புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் வேடம் தரித்து வடமதுரை புறப்பட்டார். சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அன்னதானம் நடந்தது. டாக்டர் ராகவன், வக்கீல் ஸ்ரீராம்பாலாஜி, சம்பத்குமார், சிவக்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.