பதிவு செய்த நாள்
30
அக்
2019
02:10
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில்குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம், பூஜை நடந்தன.திருப்பரங்குன்றம்சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவக் கிரகங்களுடன் எழுந்தருளிய குருபகவானுக்கு யாகசாலை பூஜை முடிந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தட்சிணாமூர்த்திக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்படியானது.
பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயில், ஹார்விபட்டிபாலமுருகன்கோயில், விளாச்சேரி ஈஸ்வரன் கோயில், சுந்தர் நகர் வெற்றிவிநாயகர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு யாகசாலை பூஜை நடந்தது.
எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் குருபகவானுக்கு சிறப்புபூஜை நடந்தது.
மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக யோக விநாயகர் கோயிலில்சிறப்பு ஹோமம், பரிகார பூஜை நடந்தன. தட்சிணாமூர்த்திக்கு பல வகைஅபிஷேகம் நடந்தன. சுரேஷ்பட்டர் தலைமையில் பட்டர்கள் ஹோமம் நடத்தினர்.
* சோழவந்தான்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலில்ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இங்கு சுயம்பாக குருபகவான் எழுந்தருளியுள்ளார். பட்டர்கள் ரங்கநாதர், ஸ்ரீதர், சடகோபன் குழுவினர் அனைத்துராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜைகளை செய்தனர். குருபகவான், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. டி.எஸ்.பி., ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் செய்தனர்.
* வாடிப்பட்டி: வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகர் ஐயப்பன் கோயிலில்தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சகர் கிருஷ்ணகுமார் தலைமையில்நடந்தது. விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதய ஈஸ்வரமுடையார்கோயிலில் சிவாச்சார்யார்பிரசாத், பூஜாரி கருத்தபாண்டியன் பரிகார ராசிகளுக்கு பூஜைகள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில் குருபகவானுக்குசிறப்பு பூஜைகள் நடந்தன. தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஐயப்பனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிசீனிவாசன் மற்றும் குழுவினர் செய்தனர்.