நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிவ உபதேச திருக்காட்சி நடந்தது.
கடந்த அக்.28 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். நேற்று முன்தினம் சிவபூஜை திருக்காட்சி நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முருகப் பெருமான் சிவ உபதேச திருக்காட்சி நடந்தது.காலையில் கொடிமர பூஜை மற்றும் சத்ரு சம்ஹார பூஜை நடந்தது. இதையடுத்து முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தை சிவ பெருமானுக்கு உபதேசம் செய்யும் திருக்காட்சி நடந்தது. தொடர்ந்து உபதேச கோலத்தில் எழுந்தருளிய சுவாமி கோயில் வளாகத்தை சுற்றி வலம் வந்தார். சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவ.2 அன்று பகலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்க உள்ளது.