பதிவு செய்த நாள்
31
அக்
2019
03:10
உடுமலை : தேவனுார்புதுார் பாலமுருகன் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
உடுமலை அருகே தேவனுார்புதுாரில், பாலமுருகன் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. அன்று, திருமஞ்சனம், வேள்வி பூஜை, காப்பு கட்டுதல், சிறப்பு பூஜை நடந்தது.நாள்தோறும், காலை 7:00 மணிக்கு, பாலமுருகனுக்கு திருமஞ்சனம் நடக் கிறது. வரும், நவ., 2ம் தேதி சூரசம்ஹாரத்தையொட்டி, மாலை, 4:30 மணிக்கு, வேல் வாங்கு தல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு, சூரசம்ஹாரம் நடக்கிறது.நவ., 3ம் தேதி, காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், பகல் 12:00 மணிக்கு, திருக்கல்யாணம், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாலமுருகன் காவடிக்குழு அன்பர்கள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர். மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், சூரசம்ஹார விழா நடந்து வருகிறது.இக்கோவிலில், சூரசம்ஹார விழா, கடந்த 28ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 3ம்தேதி வரை ஐந்து கால பூஜைகள், அபிஷேகம், சிறப்பு அலங் காரம், நடக்கிறது.நவ.,2ம் தேதி மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹார பெருவிழாவும் 3ம் தேதி மாலை, 5:30 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடக்கிறது.