பதிவு செய்த நாள்
02
நவ
2019
01:11
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், ஆயிரத்து 8 படி பாலாபிஷேகத்துடன் குருபூஜை நடந்தது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
சுவாமியின் மகாசமாதி தினமான, ஐப்பசி மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு விழாவிற்காக பல்வேறு பகுதி பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்தனர். சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை பகுதிகளில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டது. தீர்த்த, பால் கலச கிராம விளையாடல் நடத்தப்பட்டு, மூலவருக்கு தீர்த்தாபிஷேகம் நடந்தது. நேற்று மகாயாகம் நடத்தியபின் தீர்த்தம், ஆயிரத்து 8 படி பாலாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மலர், உற்சவருக்கு தங்ககிரீட அலங்காரத்துடன் குருபூஜை நடந்தது. சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம் நடந்தது. வடமாநில சாதுக்கள் பலர் தீர்த்தாபிஷேகம், குருபூஜையில் பங்கேற்றனர். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.