பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரமும், நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. இக்கோயில் கந்த சஷ்டி திருவிழா அக். 28 ல் துவங்கியது. நாளை வரை (நவ., 3) ஏழு நாட்கள் நடக்கிறது. நேற்று காலையில் பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம் உட்பட அபிஷேக பொருட்களில் ஆராதனை நடந்தது. மூலவர் பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில் உற்ஸவர்களான பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று 6ம் நாள் திருவிழாவான சூரசம்ஹாரமும், நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். திருவிழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
* பெரியகுளம் ஞானம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் கார்த்திகேயன், சண்முகர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்திருந்தார்.