குளித்தலை: மேலவெளியூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. குளித்தலை அடுத்த, மேலவெளியூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (நவம்., 2ல்) காலை, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர் கள் புனித நீர் எடுத்து வந்தனர். அதன்பின், யாக சாலையில், விக்னேஸ்வர பூஜையுடன் கும்பா பிஷேக பூஜைகள் துவங்கின. நேற்று (நவம்., 3ல்) காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.