பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
பெண்ணாடம்:கந்த சஷ்டியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (நவம்., 1ல்) அதிகாலை, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4:00 மணிக்கு மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகர் சுவாமி க்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், காலை 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணியளவில் கோவிலின் முன் பக்தர்கள் முன்னிலையில், கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை, முருகன் சம்ஹாரம் செய்தார். இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.
பரங்கிப்பேட்டைபரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில், நடந்த சூரசம்ஹார விழா வில், ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில், நேற்று முன்தினம் (நவம்., 2ல்), கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, முத்துக்குமரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை 5 மணியளவில், கச்சேரித் தெருவில், முருக பெருமான், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.