கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் முதலாமாழ்வார் உற்சவம் நேற்று மாலை நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் உற்சவங்கள் நேற்று நடந்தது. பெருமாள் தாயார் ஆழ்வாராதிகள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்த பின், திவ்விய அலங்காரம் நடந்தது.தொடர்ந்து உள்பிரகாரம் வலமாக சென்று பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். பெருமாள் தாயார் ஆழ்வார்களுக்கு பகவத் பிரார்த்தனை செய்யப்பட்டு சாற்று முறை சேவை, ஆராதனம் நடந்தது. பின்னர், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சவாமி தரிசனம் செய்தனர்.