சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன் திருமூலநாதர்சுவாமி கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. விழாவையொட்டி நவ., 2 ல் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நடந்தன. நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பட்டர்கள் மகேஷ்வரன், நாகேஷ்வரன் பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்தனர்.
திருநகர் : திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அக், 28ல் கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. உச்ச நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. முதலில் சீர்வரிசை தட்டுக்கள் எடுத்து வரப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.