பதிவு செய்த நாள்
05
நவ
2019
02:11
பழநி: பழநி முருகன்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் அடுத்த மாதம் டிசம்பரில் பாலாலய பூஜையுன் துவங்க உள்ளது. பழநி முருகன் மலைக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகமவிதிப்படி 12ஆண்டுகள் முடிந்துவிட்டது. கும்பாபிஷேகத்தி ற்காக பழமை மாறாமல் தேய்மானம், சேதமடைந்துள்ள கற்சிலைகள், தூண்கள், சுதைகளை புதுப்பிக்க வேண்டும்.
இந்துசமய அறநிலையத்துறை திருப்பணிகுழு ஸ்தபதிகள், பொறியியல், தொல்லியியல் துறை, வல்லுனர்குழு ராஜாகோபுரம், மலைக்கோயில் அனைத்து பிரகாரங்களிலும் கற்சிலை கள், மண்டபத்தூண், சுதைகளை ஆய்வுசெய்தனர். அதன்பின் கிடப்பில் விடப்பட்டது.
இந்தநிலைமையில் புதிய இணைஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி கும்பாபிஷேக திருப்பணிகளை விரைவில் துவங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி வரும் டிசம்பரில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேகப் பணிகள் துவங்க உள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சென்னையில் நவ.6ம் தேதி, அமைச்சர் தலைமையில், அறநிலைய அதிகாரி களுடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அப்போது அமைச்சரிடம் அனுமதி பெற்று, அடுத்தமாதம் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை துவங்க உள்ளோம்” என்றார்.