பதிவு செய்த நாள்
06
நவ
2019
11:11
தஞ்சாவூர் : காவிரியை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, ரத யாத்திரை மேற்கொண்டுள்ள சன்னியாசிகள், கும்பகோணம் காவிரி ஆற்றில், நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், 21ம் தேதி, கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் தலைமையில், காவிரி துாய்மை விழிப்புணர்வு ரத யாத்திரை துவங்கியது. கர்நாடகா மற்றும் தமிழகத்தின், பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரத யாத்திரை, நேற்று காலை, கும்பகோணம் வந்தது. ரத யாத்திரை குழுவிற்கு விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, கும்பகோணம் காவிரி படித்துறையில், மங்கல ஆரத்தி காட்டப்பட்டது. இதேபோல், நேற்று முன்தினம் இரவு, திருவையாறு புஷ்பமண்டப படித்துறையில், ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். 8ம் தேதி, பூம்புகாரில் ரத யாத்திரை நிறைவு பெறுகிறது.