பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு, சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றை நாதர் சுவாமிக்கு, ஆயிரம் கிலோ அரிசியால் தயாரிக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு, அன்னாபிஷேக பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு மூலவர் லிங்கத்தில் சாத்தப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொடனர்.