பதிவு செய்த நாள்
11
நவ
2019
02:11
கோவை:சீக்கிய மத குரு குருநானக்தேவ்ஜியின், 550வது பிறந்த நாளையொட்டி, நேற்று (நவம்., 10ல்) கோவையில் வாள் ஏந்தியும், இசைக்கருவிகளை இசைத்தும், சீக்கியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கோவை வி.சி.வி., சாலையில் உள்ள குருத்வாராவில், கடந்த நவ., 6 முதல், குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாள் விழா நடந்து வந்தது. சீக்கியர்களின் வீடுகளில் வழிபாடுகள் நடந்தன. நேற்று (நவம்., 10ல்) குருத்துவாராவில், குருநானக் தேவ்ஜியின் புனித நுால் வாசிப்பு நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து 12ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
துவக்க நாளான நேற்று (நவம்., 10ல்), குருத்துவாராஅமைந்துள்ள வி.சி.வி.,சாலையிலிருந்து இசை இசைத்தும், வாள் ஏந்திய சீக்கியர்கள், ஊர்வலமாக புறப்பட்டு, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை வழியாக. மேட்டுப்பாளையம் சாலையை கடந்து, மீண்டும் குருத்துவாராவை அடைந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை, குருத்துவாரா தலைவர் இக்பால்சிங், துணை தலைவர் குருப்ரீத்சிங், செயலாளர்ஷேர்சிங் ஆகியோர் செய்திருந்தனர்.