பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
உடுமலை: ஐப்பசி பவுர்ணமியையொட்டி, சிவாலயங்களில், நேற்று நடந்த அன்னாபிஷேக த்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவாலயங்களில், மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னம் மற்றும் காய்கறிகளில், அலங் கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
பின்னர், அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. உடுமலை வடக்கு குட்டை வீதி ஆதிசக்தி விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதருக்கு, அன்னாபிஷேகம் நேற்று (நவம்., 12ல்) சிறப்பாக நடந்தது.இதே போல், சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவிலில், மகா அன்னாபிஷேக விழா சிறப்பு பூஜைகளுடன் நேற்று (நவம்., 12ல்) நடந்தது.
உடுமலை ருத்தரப்பநகர் விசாலாட்சி உடனமர் பஞ்சமுகலிங்கேஸ்வரர் கோவிலில், மகா அன்னாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் (நவம்., 11ல்) பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட, பஞ்சமுகலிங்கேஸ்வரரை, பக்தர்கள், தீபங்கள் ஏற்றி, சிறப்பு வழிபட்டனர்.
நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் கோவிலில் நடந்தது. முத்தையா பிள்ளை லே-அவுட் சித்தி விநாயகர் கோவிலில், சிவனுக்கு, அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னமும், காய்கறிகளும், பிரசாதமாக வழங்கப்பட்டது.இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கோவில் களிலும், அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.