பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி., மலை, விராச்சிலை ஈஸ்வரன் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில், சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து, 51 வகை பூக்கள், வில்வம் உட்பட, 21 வகை இலைகள், 51 வகை காய்கறிகள் மற்றும் பலகாரங்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை பவுர்ணமி துவங்கும் நேரத்தில், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் பட்டது. இதேபோல், மேட்டுமருதூர் ஆரா அமுதீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.