Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத பணவரவு துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) குடும்பத்தில் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
17:40

நற்பலன்கள் அதிகரிக்கும் காரணம் சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். அதோடு சுக்கிரனும் மாதம் முழுவதும் நன்மை தருவார். இதனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். பெண்களால் நன்மை காண்பீர்கள். நீங்கள் எடுத்த முயற்சியில் பின்னடைவு ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவ.22 க்கு பிறகு சமூக மதிப்பு அதிகரிக்கும். உறவினர் மத்தியில் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும்.

பெண்கள் புத்தாடை, அணிகலன் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு குதூகலம் அடைவர். கணவரிடம் நன்மதிப்பு பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம் கவனம். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும்.

வெளியில் பல்வேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்:

தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழில் விஷயமாக வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.
ஐ.டி. துறையினருக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்
மருத்துவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். கோரிக்கைகள்  நிறைவேறும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மக்களின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். தொண்டர்களின் ஆதரவும் கிடைக்கும்.  
கலைஞர்கள் உற்சாகமாக பணியில் ஈடுபடுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சுமாரான பலன்கள்:

தொழிலதிபர்கள் அதிக முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அரசிடம் சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைக்கு ஆளாகலாம்.
வியாபாரிகள் வாடிக்கையாளரை விடாமுயற்சியால் தக்க வைக்க வேண்டியதிருக்கும்.
அரசு வேலையில் இருப்பவர்கள் சிலர் பொல்லாப்புக்கு ஆளாகலாம்.  பெண்கள் வகையில் பிரச்னை குறுக்கிடலாம். ஒதுங்கி இருக்கவும்தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.அலைச்சல் இருக்கும். முக்கிய பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
வக்கீல்கள் வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
ஆசிரியர்கள் மனஉளைச்சல் வீண் பகைக்கு ஆளாகலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிவோருக்கு அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர் உதவியை தேடாமல் தன் கையே தனக்கு உதவி என செயல்படுங்கள .    
அரசியல்வாதிகளுக்கு  அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.
விவசாயிகள் விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும். பாசிப்பயறு,  கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பண்ணை தொழிலில் கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.
பள்ளி,கல்லூரி மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். போட்டி பந்தயத்தில் வெற்றி கிடைப்பது அரிது.

* நல்ல நாள்: நவ.17,18,19, 21,22,23, 26,27,
* டிச. 3,4,5,6,7,13,14,15,16
* கவன நாள்: டிச.8,9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,9
* நிறம்: மஞ்சள், சிவப்பு

* பரிகாரம்:
●  செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு நெய் தீபம்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை
●  ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் தரிசனம்

 
மேலும் மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை) »
temple
நல்ல மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொன், ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 8ல் இருக்கும் ... மேலும்
 
temple
மதிநுட்பம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் டிச.21 வரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ... மேலும்
 
temple
கடமை உணர்வு மிக்க கடக ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. ... மேலும்
 
temple
புதுமை எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 11ல் இருக்கும் ராகுவால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.